சுடுகாட்டில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்! விசாரணையில் அம்பலமான கணவனின் ரகசிய உறவு! ராஜபாளையம் பகீர்!

மனைவியை கணவர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்வதற்கும் சம்பவமானது ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜபாளையத்தில் சங்கரபாண்டியபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 7-ஆம் தேதி அன்று மர்மமான முறையில் ஒரு பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் சடலத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் கழுத்தில் தாலி தொங்கிக்கொண்டு இருந்ததால் அவர் திருமணமானவர் என்று காவல்துறையினர் கருதினர். 

அவரின் அடையாளம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த 29 வயதான பழனியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய கணவர் குணசேகரன் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பழனியம்மாள் இறந்த நாளிலிருந்து குணசேகரன் தலைமறைவாக இருந்ததால் காவல்துறையினருக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குணசேகரன் கேரளாவில் உள்ள ஒரு தேனீர் எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரமானது பழனியம்மாவுக்கு தெரியவர கணவன் மனைவி இடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்தன. 

7-ஆம் தேதியன்று கேரளாவிலிருந்து ராஜபாளையத்துக்கு வந்த குணசேகரன், நேரடியாக தன்னுடைய மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தன் மனைவியுடன் குணசேகரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனால் பாண்டியம்மாள் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர். 

கேரளாவிற்கு சென்று குனசேகரனை தேடி பார்த்தனர். ஆனால் அவரை எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவழியாக கொல்லம் பகுதியில் உள்ள தேநீர் எஸ்டேட்டில் அவர் வேலை பார்த்து வந்த காவல்துறையினர் கண்டறிந்தனர்.

உடனடியாக அங்கு சென்று குனசேகரனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குணசேகரன் மனைவி பழனியம்மாள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.