60 அடி உயர பனை மரம்! நொடியில் ஏறி கள் இறக்கும் 33 வயது பெண்! ஆண்களை அசர வைக்கும் லாவகம்!

கள் இரக்கும் தொழிலில் 2 கேரளா பெண்கள் ஈடுபட்டுள்ள சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் கண்ணூர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு உட்பட்ட பண்ணியோடு எனும் பகுதியை சேர்ந்தவர் ஷீபா. இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவர் பனையேறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் சாலை விபத்திற்குள்ளானார். அன்றிலிருந்து குடும்ப சூழ்நிலை ஆனது வறுமையை நோக்கி சென்றது. இதனை சீர் செய்வதற்காக ஷீபா பனையேறும் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தார்.

தொடக்கத்தில் ஷீபாவுக்கு இந்தத் தொழில் மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும் குடும்ப வறுமையின் காரணமாலும், விடா முயற்சியினாலும் இந்த தொழிலை கற்றுக்கொண்டார்.

தற்போது அவர் தன்னுடைய வளர்ப்பு நாயுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். உயரத்தை பொருட்படுத்தாமல் பெரிய பெரிய பனை மற்றும் ரப்பர் மரங்களில் ஏறி தனக்குரிய வேலைகளை செய்து வருகிறார்.

இவருடைய சமுதாயத்தினர் தொடக்கத்தில் இவருடைய வேலைக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டனர். இருப்பினும் இவருடைய உழைப்பானது இவருக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. தற்போது பலரும் இவரை விரும்பி அவர்களுடைய பணிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஷீபாவின் உழைப்பானது அனைத்து பெண்களையும் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.