திருமணமாகி ஒன்பதே நாள்! மனைவி ஆசையாக கொடுத்த மோர்.! வாங்கி பருகிய புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மனைவி கொடுத்த மோரை பருகியவுடன் கணவர் மயக்கமடைந்து கீழே விழுந்த சம்பவமானது ஆந்திரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு லிங்காமையா என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு 9 நாட்களுக்கு முன்னர் மதானந்தபுரம் கிராமத்தை சேர்ந்த நாகமணி என்ற 20 வயது இளம் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தன்னுடைய சொந்த கிராமத்திற்கு மனைவியை அழைத்து வருவதற்காக லிங்காமையா மனைவியின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மாமியார் வீட்டில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு மனைவி எடுத்துக்கொண்டு வந்த மோரை பருகியுள்ளார். மோரில் துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்த லிங்காமையா, புளித்திருப்பதால் அப்படி மனம் வீசுவதாக கருதி குடித்துள்ளார்.

மோர் பருகிய அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.  காவல்துறையினர் மோரில் எவ்வாறு விஷம் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் நாகமணியின் பங்கு இருக்குமோ என்ற கோணத்திலும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.