மனைவியின் நடத்தை சரியில்லை! குழந்தைகளுக்கு கணவனால் ஏற்பட்ட கொடூரம்! போலீசை அதிர வைத்த வாக்குமூலம்!

இரும்பு கம்பியால் அடித்து மனைவியையும், 2 குழந்தைகளையும் கணவர் கொலை செய்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் விக்ராபாத் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஊசிகள் தயாரிக்கும் தனியார் மையத்தில் பிரவீன் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 33. இவருடைய மனைவியின் பெயர் சாந்தினி. சாந்தினியின் வயது 28. இத்தம்பதியினருக்கு அயான் என்ற மகனும் கிறிஸ்டி என்ற மகளும் உள்ளனர்.

சாந்தினி மோதிபாகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக   பணியாற்றி வருகிறார். சாந்தினிக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. 5 வருடங்களுக்கு முன்னர் தன் முதல் கணவரை விவாகரத்து செய்தார். அவருக்கு பிறந்த மகன் தான் அயான். பின்னர் பிரவீன் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு அடுத்த ஆண்டே கிறிஸ்டி பிறந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இருந்து பிரவீன்குமார் சாந்தினியை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். சாந்தினியின் நடத்தையை சந்தேகித்து அவரை தொந்தரவு செய்து வந்தார்.

இதனால் இருவருக்கும் பலத்த சண்டை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. பிரவீன் குமார் தன் தாய் மற்றும் சகோதரர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றினார். வாக்குவாதங்களால் கோபமடைந்த பிரவீன்குமார் தன் மனைவியின் தலையில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்தார்.

பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் தன் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என்பதால், அவர்களையும் கொள்ள நினைத்தார். அயான் மற்றும் கிறிஸ்டியின் கலைகளில் இரும்பு ராடால் பலமாக அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் விக்ராபாத் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 3 பேரை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.