மனைவி நடத்தையில் மாற்றம்! திடீர் மாயம்! 2 குழந்தைகளுடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து கணவன் அரங்கேற்றிய பயங்கரம்! மதுரை திகுதிகு!

சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கருப்பையாவின் வயது 35. இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் கீதா. இத்தம்பதியினருக்கு பிரதீபா என்ற 7 வயது மகளும், ஹேமலதா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.

இதனிடையே அனைத்து சில மாதங்களாக கீதாவின் நடத்துவதில் கருப்பையா சந்தேகம் அடைந்துள்ளார். இதுகுறித்து பலமுறை இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் இந்த விவகாரமானது உசிலம்பட்டி காவல் நிலையம் வரை சென்றது. இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கீதா கருப்பையாவை பிரிந்து தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்றுக்காலை கருப்பையா வழக்கம்போல டீக்கடை நடத்தி வந்தார். அவருடன் 2 மகள்களும் இருந்தனர். இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் டீ கடையில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. வெடித்ததில் மளமளவென டீ கடை முழுவதும் தீ பரவியது. டீ கடையில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டன.

உள்ளே சிக்கிக்கொண்ட கருப்பையாவும், பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹேமலதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஹேமலதாவும் உயிரிழந்தார்.

கடைக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ பரவுவதற்குள் அணைத்தனர். காவல்துறையினர் கருப்பையா மற்றும் பிரதீபாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்த சோகத்தில் கருப்பையா மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.