தனிமையில் தவித்ததால் இளைஞருடன் மனைவி தகாத உறவு! வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் அரங்கேற்றிய கொடூரம்!

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு கணவன் கொலை செய்த சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் செந்துறை என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள நாகல்குழி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய வயது 30. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு அனுஷ்யா என்ற 9 வயது மகளும், சபரி என்ற 7 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர், பாக்யராஜுக்கு சவுதி அரேபியாவில் வேலை கிடைத்தது இடம்பெயர்ந்தார். அம்பிகா தன் குழந்தைகளுடன் இங்கேயே வசித்து வந்தார். அப்போது இளைஞர் ஒருவருடன் அம்பிகா நெருங்கி பழகி வந்துள்ளார். ஒரு மாதம் முன்னர் பாக்யராஜ் அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பினார். 

அப்போதிலிருந்தே சின்ன சின்ன விஷயங்களில் அவருக்கு மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. வழக்கம்போல நேற்று காலை இருவருக்குமிடையே சண்டை தொடங்கியுள்ளது. வாக்குவாதங்கள் முற்றியதில் பாக்யராஜ் மிகவும் கோபமடைந்தார்.

கோபம் தலைக்கு ஏறியதில் தன் மனைவி அம்பிகாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் துடித்த அம்பிகாவை உறவினர்கள் அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா உயிரிழந்தார்.

சம்பவமறிந்து மருத்துவமனைக்கு வந்த இரும்புலிகுறிச்சி காவல்துறையினர் பாக்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.