கணவனை வெளியூர் அனுப்பிவிட்டு கள்ளக்காதலனுடன் காதலர் தினம்! இளம் மனைவிக்கு நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவர் கொலை செய்த சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள காடாம்புலியூர் எனும் இடத்தை சேர்ந்தவர் குமரவேல். குமரவேலின் வயது 25. இவருடைய மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரியின் வயது 22. இத்தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பண்ருட்டியில் உள்ள அன்வர்ஷா என்னுமிடத்தில் இவர்கள் வசித்து வந்தனர்.

குமரவேல் மெக்கானிக்காக பணியாற்றி வருவதால் இரவு நேரங்களில் பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். அப்போது ராஜேஸ்வரிக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு வாலிபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த குமரவேல் ராஜேஸ்வரியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் ராஜேஸ்வரி கணவரின் சொல்லை கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இதனிடையே, காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி தன்னுடைய கள்ளக்காதலனுடன் வெளியே சென்று வந்துள்ளார். இதனை அறிந்த குமரவேல் ராஜேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், தன்‌ மனைவி என்றும் பாராமல் இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்துள்ளார். 

அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காமல், அவர்களின் தலையில் அம்மி உரலை போட்டு தாக்கியுள்ளார். மனைவி இறந்ததை அடுத்து, குழந்தைகளை அழைத்து கொண்டு இரவோடு இரவாக தலைமறைவானார்.

மறுநாள் காலையில் ரத்தம் வீட்டிற்கு வெளியே வழிந்து கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பின்னர் ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாகியுள்ள குமரவேல் மற்றும் அவரது குழந்தைகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.