இரவு வீடு திரும்பாத தாய்! தோட்டத்திற்கு சென்று பார்த்த மகன்கள் கண்ட காட்சி! தந்தை அரங்கேற்றிய அதிர வைக்கும் சம்பவம்!

மனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பூந்தமல்லியில் பாப்பான் சத்திரம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பாரதியார் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தோட்ட வேலைகளை பார்த்து வந்துள்ளார். 

சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு நெடுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மகன்கள் மாரிமுத்து வேலை செய்யும் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது தலையில் பலத்த காயங்களுடன் ரேவதி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்திலிருந்த மரத்தில் தந்தை மாரிமுத்து தொங்கி கொண்டிருப்பதை கண்டு மனமுடைந்தனர். உடனடியாக நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

அதாவது மாரிமுத்துவுக்கு தன் மனைவியான ரேவதியின் நடத்தையில் நீண்ட நாட்களாக சந்தேகமிருந்து வந்துள்ளது. இதனால் நேற்று ரேவதியுடன் மாரிமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் வேட்டியால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்துள்ளார். இந்த செய்தியானது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவமானது நசரத்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.