விபத்தில் கணவன் இறந்ததால் குழந்தைகளுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் துடிதுடித்து இறந்த கணவன்..! தனிமையில் தவித்த மனைவி மகனுடன் எடுத்த விபரீத முடிவு! அறந்தாங்கி அதிர்ச்சி!

அறந்தாங்கி அருகே நாககுடி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அசோகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் தேவிபாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு யுகேஷ், யுவர்ஷனா என்று 2 குழந்தைகள் உள்ளனர். அசோகன் அப்பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் அசோகன் வெட்டிவயல் எனும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த தேவிபாலாவால் குடும்பத்தை நடத்த இயலவில்லை. ஒவ்வொரு மாதமும் மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். கணவன் இறந்த வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் நம்பர் தெரிந்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேவிபாலா மனமுடைந்தார்.
வாழ்க்கையை இயல்பான முறையில் நடத்த இயலாததால் தேவிபாலா தன்னுடைய குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றுள்ளார். குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து விட்டு, தானும் பல தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
3 பேரின் நிலையை கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர், அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்கொலை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாககுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.