நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கணவர்..! அடுத்த சில நாட்களில் கொரோனாவை ஒழிக்க அவர் மனைவி செய்த நெகிழ வைக்கும் செயல்..!

கணவர் உயிரிழந்த போதிலும், மனைவி கொரோனா வைரஸ் நன்கொடை அளித்துள்ள சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


இந்தியா முழுவதிலும் 33,610 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 8,373 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 1,075 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் இந்த தாக்குதலில் தங்களால் இயன்ற உதவி செய்ததற்காக நன்கொடை அளித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் தங்களால் இயன்ற அளவிற்கு பேருதவி செய்து வருகின்றனர்.

அவ்வகையில் சென்ற மாதம் விதவையான பெண் ஒருவர் நிதி அளித்திருப்பது அனைவருக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சி.ஏ.ஃஎப் அதிகாரி ஒருவர் சென்ற மாதம் நடந்த நக்சல் தாக்குதலில் உயிரிழந்தார். இவருடைய மனைவியின் பெயர் ராதிகா சாஹு. இவருடைய வயது 26. 

கணவனை இழந்து வாடி வரும் நிலையிலும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக 10,000 ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "உயிருடன் இருந்தவரை என்னுடைய கணவர் அனைவருக்கும் உதவி செய்து வந்தார். அவருடைய பணியை அவர் இறந்த பின்னும் தொடர வேண்டும் என்பதற்காக இந்த நிதி உதவியை செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.