ஆண்கள் முன்னிலையில் ஆடைகள் இல்லாமல் நிற்பது ஏன்? திருமணமான பெண்மணி சொல்லும் நெகிழ்ச்சி காரணம்!

தமிழ்நாட்டு பெண்ணொருவர் மும்பை கலைக்கல்லூரியில் நிர்வாண மாடலாக பணியாற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை மாநகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனலக்ஷ்மி மணிமுதலியார் என்பவர் பிறந்தார். இவருடைய 5 வயதிலேயே குடும்பத்தினருடன் மும்பை மாநகரத்திற்கு குடிபெயர்ந்தார்.14 வயதில் தனலட்சுமி மணி என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதலில் ஒரு மகன் பிறந்தது. மூத்த மகனுக்கு 6 வயதான போது, தனலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். அப்போது அவருடைய கணவர் அகாலமரணம் அடைந்தார். 

குடும்பத்தை காப்பாற்றும் முழு பொறுப்பும் தனலட்சுமிக்கு வந்தது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு எதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை கலைக்கல்லூரியில் ராஜம்மா என்பவருடன் அப்போதுதான் தனலட்சுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தனலட்சுமியிடம் ராஜம்மாள் நிர்வாண மாடலாக நடிக்கும் யோசனையை கூறியுள்ளார். முதலில் தயங்கிய தனலட்சுமி, ராஜம்மாள் எடுத்துக் கூறிய பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார். பல வகுப்புகளில் நிர்வாண மாடலாக நடிக்கும் ராஜம்மாளுக்கு கிடைக்கும் மரியாதையும் கண்டு வியந்துள்ளார்.

பின்னர் தானும் நிர்வாண மாடல் தொழிலை மேற்கொண்டார். நிர்வாணமாக தன்னை ஓவியமாக வரைய 1000 ரூபாயும், உடைகளுடன் ஓவியமாக வரைய 400 ரூபாயும் பெற்றுக்கொண்டுள்ளார். மாடலாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். தற்போது இவருக்கு அந்த கல்லூரியில் நல்ல மரியாதை கிடைப்பதாக கூறியுள்ளார். 

பல்வேறு கலைநயமிக்க ஓவியர்கள் அவருடைய காலில் விழுந்து வழங்கி செல்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுவரை தான் பேராசிரியர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுப்பதும், துப்புரவு பணிகளை மேற்கொள்வதுமாக தன் பிள்ளைகளிடம் கூறியுள்ளார். மிகவும் இளைய வயதில் கணவரை இழந்து குழந்தைகளை வளர்த்தல் தனலட்சுமியின் கதை அனைவரையும் வியக்க வைக்கிறது.