என்னால முடியல! அதான் மனைவியை உயிரோட புதைச்சிட்டேன்! அதிர வைத்த கணவன்! பதற வைக்கும் காரணம்!

மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லாத காரணத்தினால் மனைவியை உயிருடன் புதைத்த சம்பவமானது கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவா மாநிலத்தை சேர்ந்தவர் துக்காராம். துக்காராமின் வயது 46. இவருடைய மனைவியின் பெயர் தான்வி. தாண்வியின் வயது 44. தான்வி நோய்வாய்ப்பட்டவராவார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்கு துக்காராமிடம் பணமில்லாத காரணத்தினால் செய்வதறியாது திகைத்துள்ளார்.

அப்போது மனைவியை கொன்றுவிட துக்காராம் திட்டமிட்டுள்ளார். நர்வீம் என்ற கிராமத்திலுள்ள நீர் பாசன கால்வாய் அருகே மனைவியை துக்காராம் உயிருடன் புதைத்துள்ளார். திடீரென்று தான்வி காணாமல் போனது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

அப்போது அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் துக்காராமிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 

அப்போது மனைவியை கொன்று புதைத்ததாக துக்காராம் ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவர் புதைத்த இடத்திற்கு சென்று தான்வியின் சடலத்தை மீட்டெடுத்தனர். துக்காராமிடம் விசாரணை நடத்தியபோது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பணம் இல்லாததால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

துக்காராமை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.