கணவனிடம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை..! அதனால் காதலனுடன்..! மனைவி செய்த விபரீத செயல்!

கணவர் முட்டை வாங்கி தராததால் கோபமடைந்த பெண் காதலுடன் ஓடிப்போன சம்பவமானது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார். இதற்கு சில மாதங்கள் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணுக்கு முட்டை என்றால் அநேக பிரியம். மேலும் அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞன் மீது காதல் இருந்துள்ளது. தினமும் முட்டை வேண்டுமென்று கணவரை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் கூலி தொழிலாளியான அவருடைய கணவர் தினமும் முட்டை வாங்கி தர இயலவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் இதே காரணத்திற்காக இருவரும் சண்டை போட்டுள்ளனர். 

தன் கனவரின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த பெண் தன் காதலனுடன் சேர்ந்து ஓடியுள்ளார். சம்பவமறிந்து கணவர், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இந்த பெண் தன் காதலனுடன் ஓடியுள்ளதை உறுதி செய்தனர். 

புகாரில் அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், "நான் கூலி தொழிலாளி என் மனைவிக்கு என்னால் தினமும் முட்டை வாங்கி தர இயலவில்லை. இந்நிலையில் என் மனைவியின் ஆசையை புரிந்து கொண்ட அந்த இளைஞர் அவருக்கு முட்டை வாங்கி கொடுத்தேன் தன் வசப்படுத்தி விட்டார்" என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியானது உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.