கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் நடுரோட்டில் கணவன் செய்த பயங்கர செயல்! அதிர்ச்சியில் உறைந்து நின்ற புது மனைவி!

மனைவியின் கண்ணெதிரே கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே மகேஷ்குமார் என்ற 32 வயது ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவருக்கு ஜூலை மாதம் 11-ஆம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

திருமணம் நடந்த நாள் முதல் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வழக்கம் போல சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தை திடீரென்று நிறுத்தியுள்ளார். பின்னர் மேம்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தன் கண்முன்னே நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்டு புவனேஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேம்பாலத்துக்கு கீழே வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் மகேஷ்குமார் சடலமாக கிடந்தார். இதனை கண்ட புவனேஸ்வரி அழுதுகொண்டே இருந்தார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மகேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தற்கொலைக்கான விசாரணையில் புவனேஸ்வரியிடமிருந்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PHOTO COURTESY: நக்கீரன்