சந்தேக மனைவி! அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட கணவன் - புதுடெல்லி பரபரப்பு

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன், தன்னுடைய முடிவுக்கு மனைவியே கண்டன கடிதம் எழுதி வைத்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


புதுடெல்லியில் நியூ அசோக் நகர் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு சனித்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 34. இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் பணிப்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருடன் சனித்குமார் சற்று நெருக்கமாக பழகி வந்தார்.

இதனை அவருடைய மனைவி சந்தேகித்துள்ளார். பலமுறை அவர்களுக்குள் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனிடையே ஒரு முறை பொது இடத்தில் வைத்து சனித்குமாரின் மனைவி அவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.

இதனால் சனித்குமார் மிகவும் மனம் உடைந்தார். நேற்றிரவு வேலை முடித்து வந்த சனித்குமார் கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டார். தன்னுடைய அறையில் இருந்த சனித்குமார் திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு மனைவி கடும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சனித்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவருடைய வீட்டில் தடயங்களை தேடினர். அப்போது சனித் எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் அவர், " நான் இந்த முடிவை எடுத்ததற்கு என் மனைவியே காரணம்" என்று எழுதியிருந்தார். 

சனித்தின் தற்கொலைக்கு அவருடைய மனைவியும், மாமனாருமே காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவமானது புதுடெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.