குடும்ப நடத்த வர மறுத்த மனைவி! விரக்தியில் கணவன் செய்த விபரீத செயல்!

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தி அடைந்த கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சித்திபேட்டா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது‌. இம்மாவட்டத்துக்கு உட்பட்ட கடவேர்க்கு கிராமத்தை சேர்ந்தவர் யாதகிரி. யாதகிரியும் அவருடைய மனைவியும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2 மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். யாதகிரியின் மனைவி ஆத்திரமடைந்து தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்றார்.

யாதகிரி தன் மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர எவ்வளவோ முயன்றார் ஆனால் அவருடைய மனைவி யாதகிரியின் கருத்துக்களை ஏற்கவில்லை மேலும் இனிமேல் அவருடன் குடும்பம் நடத்த இயலாது என்றும் கூறியுள்ளார். மனைவியின் கடுஞ் சொற்களைக் கேட்டு விரக்தியடைந்த யாதகிரி தற்கொலை செய்வது என்று திட்டமிட்டார்.

அதே கிராமத்திலேயே உள்ள நீர்நிலை தேக்கம் பகுதியின் மேல் ஏறிக்கொண்டு கீழே குதிப்பதற்கு திட்டமிட்டிருந்தார். கிராம மக்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை இறுதியில் மிக உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த யாதகிரியை பொதுமக்கள் செக்கந்தராபாத் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.