கல்யாணம் ஆகி 16 வருசம் ஆச்சி..! பொண்டாட்டி இன்னும் அந்த மேட்டருக்கு ஒத்துக்கமாட்றா..! கோவை நீதிமன்றத்தில் கதறிய கணவன்!

தாம்பத்திய உறவை காரணம் காட்டி 16 வருடங்களுக்கு பிறகு நபர் ஒருவர் விவாகரத்து கேட்டிருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


1997-ஆம் ஆண்டில் குணா மற்றும் வனிதா ஆகியோர் ஈரோட்டில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு 1999-ஆம் ஆண்டில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனிடையே 16 வருடங்கள் கழித்து குணா மனைவி தாம்பத்திய உறவில் ஒத்துழைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுள்ளார். 

விவாகரத்துக்கான காரணத்தை அறிந்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனிதாவிடம் விசாரணை நடத்தியதில், "16 வருடங்களுக்கு பின்னர் தாம்பத்திய உறவில் ஒத்துழைக்கவில்லை என்று கூறுவது அசிங்கமான பொய். அவர் தற்போது அவருடைய அத்தை மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருகிறார். என்னையும் குழந்தையையும் பிடிக்கவில்லை என்றால், மாதம் எங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் தரும்படி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

விசாரணையின் முடிவில் நீதிபதிகள் மாதந்தோறும் குனா வனிதாவுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் இந்த தீர்ப்பை குணா ஒப்புக்கொள்ளவில்லை. மேல்முறையீட்டுக்கு சென்றார். அங்கு நீதிபதிகள், "16 வருடங்கள் கழித்து தாம்பத்ய உறவில் ஒத்துழைக்கவில்லை என்று கூறுவது கேவலமாக உள்ளது. திருமணமான சில மாதங்களில் கூறியிருந்தால் யோசித்திருக்கலாம். இந்த கேவலமான காரணத்திற்காக விவாகரத்து கொடுக்க இயலாது" தீர்ப்பளித்தார். 

இந்த சம்பவமானது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.