மனைவியின் சடலத்தை ரூமுக்குள் போட்டு பூட்டிவிட்டு தலையுடன் போலீஸ் ஸ்டேசன் சென்ற கணவன்! அதிர வைத்த காரணம்!

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் கணவர் காவல் நிலையம் சென்ற சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் நரேஷ் என்பவர் வசித்துவருகிறார். டிவி சர்வீஸ் செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். 17 வருடங்களுக்கு முன்னர் சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே எப்பொழுதும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் நரேஷ் குடித்துக்கொண்டிருந்த போது அவருடைய மனைவி தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த நரேஷ்  சாந்தியின் தலையை அரிவாளால் வெட்டியுள்ளார். தலையில்லாமல் முண்டமாக இருந்த சடலத்தை நரேஷ் வேறொரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். சாந்தியின் தலையை ஒரு டப்பாவுக்குள் மூடி வைத்துள்ளார்.

மறுநாள் காலையில் குழந்தையுடன் தாயின்றி கத்தியுள்ளனர். மூத்த மகள் வேறொரு அழைத்து சென்று எட்டிப்பார்த்தபோது, தலையில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றாள். அவருடைய உறவினர்களிடம் இது பற்றி கூறியுள்ளார். விரைந்து வந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்குள்ளேயே சாந்தியின் தலையுடன் நரேஷ் காவல் நிலையத்தை சென்றடைந்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தின் போது மது அருந்தவில்லை என்றும், மனைவியின் கள்ளக்காதலினாலேயே அவரை கொலை செய்ததாகவும் நரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.