திருமணமான முதலிரவில் கணவன் செல்போனுக்கு வந்த மெசேஜ்..! என்ன என பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கதறும் நளினகுமாரி!

மனைவியை ஏமாற்றி கணவர் வேறோரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் பால்ராம்புரம் எனும் இடம் அமைந்துள்ளது. நீங்க நளினகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவரின் பெயர் ஷாஜின் முகமது. இதனிடையே கணவர் தந்தை நெடுங்காலமாக கொடுமைப்படுத்தி வருவதாக நளின குமாரி நாகை மாவட்டத்திலுள்ள எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், " 2012-ஆம் ஆண்டில் முதன் முதலில் நான் ஷாஜினை சந்தித்தேன். அப்போது முதல் நாங்கள் பழகி வந்தோம். இதனிடையே எங்கள் பழக்கம் நெருக்கமாகி காதலாக மாறியது. எனக்கு ஏற்கனவே ஒரு திருமணம் ஆகியிருந்தது. என்னுடைய கணவரை பிணியை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறிய போதிலும் ஷாஜின் என்னை ஏற்றுக்கொள்வதாக கூறினார். 16:09:2013 எங்களுடைய திருமணம் நடைபெற்றது. 

எங்களுடைய முதல் இரவன்று என்னுடைய கணவரின் செல்போனுக்கு வேறொரு பெண்ணிடமிருந்து ஆபாசமான ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து நான் விசாரித்த போது, எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரியவந்தது.

தகராறுகளுக்கு மத்தியில் நாங்கள் இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனாலும் அவர் அந்த பெண்ணுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை. 2017-ஆம் ஆண்டின் போது எங்களுக்குள் பெரிய தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை அவர் இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கினார்.

இதனால் படுகாயமடைந்த நான் கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போதிலிருந்து நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் சென்ற ஆண்டு அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த செய்தி எனக்கு சமீபத்தில் தான் தெரிய வந்தது. இவ்வாறு பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய என்னுடைய கணவர் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் மனைவி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஷாஜின் மறுத்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.