மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கணவன்..! மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டை பற்ற வைத்து செய்த பகீர் செயல்!

குடும்பத்தகராறினால் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, கணவர் எரித்து கொலை செய்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ஆதம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள கக்கன் நகரில் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பஞ்சவர்ணம். இவ்விருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வண்ணம் இருந்துள்ளன.

இதனிடையே சம்பவத்தன்று வழக்கம்போல கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை மனைவியின் மீது ஊற்றி சிகரெட்டால் தீவைத்து எரித்துள்ளார். 

வெப்பம் தாங்காமல் அலறிய பஞ்சவர்ணததை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக பஞ்சவர்ணத்திடம் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலத்தை பெற்றார். வாக்குமூலத்தில் பஞ்சவர்ணம், தன் மீது இருந்த ஆத்திரத்தினால் மண்ணெண்ணையை ஊற்றி கணவன் தன்னை கொலை செய்ததாக கூறியுள்ளார். 

வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் உடனடியாக ராஜனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஆதம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.