நான் ஹார்ன் அடிப்பேன் நீங்க வந்துடனும்..! 2 ஆண்களிடம் மனைவியை கொடுத்து கணவன் செய்த நினைத்து பார்க்க முடியாத செயல்!

கணவர் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதை கண்டித்த மனைவியை, கூலிப்படையை வைத்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலத்தை அடுத்த உள்ள அம்மாபாளையம் காலனியில் வசித்து வருபவர் சந்தோஷ். 30 வயதாகும் இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவருக்கு வயது 27. இவர்கள் இருவரும் ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த 30ம் தேதி தன் மனைவியுடன் வெளியில் சென்ற சந்தோஷ் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அம்மா பாளையத்தில் உள்ள ஏரிக்கரை அருகே வந்த போது மர்ம நபர்கள் இருவர் இவர்கள் வந்த டூவீலரை மறித்து சந்தோஷ் என்பவரின் மனைவி ஜெயந்தியின் முகத்தில் மட்டும் மிளகாய் பொடியை தூவி அவரை கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஜெயந்தி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் பலத்த காயமடைந்த ஜெயந்தி போலீசாரிடம் புகார் அளித்ததால் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் எதையும் செய்யவில்லை. மேலும் பைக்கை மறித்த மர்ம நபர்கள் கணவர் சந்தோஷை ஒன்றும் செய்யாமல் மனைவி ஜெயந்தியை மட்டும் அரிவாளால் தாக்கியது ஏன் என்று சந்தேகம் அடைந்த போலீசார் அவரது கணவனை விசாரிக்கத் தொடங்கினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

இந்த விசாரணையில் படுகாயமடைந்த ஜெயந்தியின் கணவர் சந்தோஷ் கூறியதாவது: எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இந்த விஷயம் என் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் என் மனைவி அவருடன் பழகுவதை நிறுத்தி விடுமாறு என்னிடம் கூறினாள். ஆனால் எனக்கு மனைவியை விட அந்தப் பெண்ணை தான் பிடித்து இருந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இடையூராக உள்ள என் மனைவியை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டேன். என் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை சேர்ந்த 2 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக பேசினேன். 

எனது திட்டத்தின்படி கூலிப்படையினர் நான் சொன்ன இடத்தில் தயாராக இருந்தனர். நான் மனைவியுடன் பைக்கில் அந்த பகுதிக்கு மிக அருகே சென்றபோது என் பைக்கில் இருந்த ஹார்னை அடித்தேன். இதனால் நாங்கள் வருவதை தெரிந்து கொண்ட அந்த கூலிப்படையினர் எனது திட்டப்படி எனது பைக்கை மறித்து என் மனைவியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பயங்கர காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த என் மனைவி கீழே விழுந்தாள். இதனால் அவள் இறந்துவிட்டால் என்று நான் நினைத்தேன். என் மீது சந்தேகம் வரக்கூடாது என்ற காரணத்திற்காக அவளை காப்பாற்றும் வகையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தேன். ஆனால் மாறாக மயக்க நிலையில் இருந்த எனது மனைவி உயிர் பிழைத்து கொண்டாள் என போலீஸ் விசாரணையில் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமான ஜெயந்தியின் கணவர் சந்தோஷ் என்பவரையும் கூலிப்படையை சேர்ந்த அம்மாபாளையம் பகுதியில் உள்ள விஜயகுமார் என்பவரையும், கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.