திருமணமாகி ஐந்தே நாள்! நடு வீட்டில் மணப்பெண் சடலம்! தண்டவாளத்தில் மணமகன் சடலம்! தாம்பத்ய இரவில் நடந்தது என்ன?

டெல்லியில் திருமணமாகி ஐந்து நாட்களில் கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியில் மயூர் விஹார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வருபவர் மஞ்சீத் ஆவார். மஞ்சீத்திற்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் திருமணமாகி ஐந்து நாட்களில் ( அதாவது கடந்த 31ஆம் தேதி) சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் காரணமாக ஆர்த்தி தன்னுடைய படுக்கை அறை கதவை பூட்டிக்கொண்டு தனியாக உறங்கி இருக்கிறார். சண்டையின் காரணமாக மஞ்சீத் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். 

மறுநாள் காலை வெகுநேரமாகியும் ஆர்த்தி தன்னுடைய அறையை விட்டு வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகப்பட்டு உள்ளனர். இதனையடுத்து கதவை தட்டி

 ஆர்த்தியை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் ஆர்த்தி கதவு திறக்காததால் சந்தேகம் அதிகரித்து காணப்பட்டவர்கள் பூட்டை உடைத்து அறைக்குள் நுழைந்து பார்த்துள்ளனர். அது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் உள்ளே பார்த்தபொழுது ஆர்த்தி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

 

தகவலறிந்து வந்த போலீசார் ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சமயத்தில் இந்த குடும்பத்தினருக்கு மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வந்து சேர்ந்துள்ளது. அதாவது ஆர்த்தியின் கணவர் மஞ்சீத் அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடப்பதாக தகவல் வந்துள்ளது. இது அவரது குடும்பத்திற்கு மேலும் அதிர்ச்சியை சேர்த்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையின் முடிவில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தான் அவர்களின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்கு பின்பு கணவன் மனைவி இருவரது உடலும் ஒரே இடத்தில் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது. திருமணமாகி ஐந்து நாட்களில் கணவன் மனைவி இருவருக்கும் நடந்த இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.