ரொம்ப வேக்காடா இருக்கு! அந்த ஏசியை ஆன் பண்ணு! அடுத்த சில நிமிடங்களில் துடிதுடித்து உயிரிழந்த கணவன்..! மனைவி..!

ஜோலார்பேட்டையில் ஏசி இயந்திரம் வெடித்து கணவன் மனைவி இருவரும் இணைந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜோலார்பேட்டை பகுதியில் வக்கணம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சண்முகம் ( வயது 45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது வீடு திருப்பூர் பகுதியில் உள்ள மஞ்சூர் தியேட்டர் அருகே அமைந்துள்ளது. இவருக்கு திருமணமாகி சௌமியா (வயது 8) என்ற மகளும் உள்ளார். நேற்று முன்தினம் சண்முகம் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். 

அப்போது அனைவரும் ஒன்றாக இணைந்து படுக்கை அறையில் ஏசி போட்டு படுத்து உறங்கி இருக்கின்றனர். சண்முகம் மற்றும் அவரது மனைவி வெற்றிச்செல்வி மகள் சௌமியா ஆகியோர் நிம்மதியான தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். நிலையில் எதிர்பாராத விதமாக அவர்களுக்கு மிகப்பெரிய சோகம் காத்துக்கொண்டிருந்தது.

அதாவது சௌமியா தன்னுடைய அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்பி தன்னை கழிவறைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார் . ஆகையால் அம்மாவும் மகளும் இணைந்து கழிவறைக்குள் சென்றிருக்கின்றனர் . அப்பொழுது திடீரென்று படுக்கை அறையில் இருந்து வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

சட்டம் கேட்டவுடன் வெற்றிசெல்வி அலறி அடித்துக் கொண்டு தன் கணவனை காப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அறையிலிருந்து ஏசி வெடித்து அரை முழுவதும் நெருப்பு பற்றி எரிந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் மின்சாரமும் தடைபட்டுள்ளது.

தன் கணவரை காப்பாற்ற சென்ற வெற்றி செழியன் அந்த தீயில் சிக்கிக் கொண்டார். கழிவறைக்கு சென்றதால் சௌமியா நெருப்பில் சிக்காமல் உயிர்தப்பினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக இவர்களை காப்பாற்றுவதற்காக வந்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்தவர்கள் சண்முகம் மற்றும் அவரது மனைவி வெற்றிச்செல்வி ஆகியவர்களை அந்த நெருப்பில் இருந்து மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெற்றி செல்விக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.