குடிபோதையில் கணவன் கேட்ட ஒரே கேள்வி! தூக்கில் தொங்கிய மனைவி!

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னை புறநகரான ஓட்டேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்த ஓட்டேரியில் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 

திருமணமான சில நாட்களிலேயே இருவரும் சண்டை போட்டுக்கொள்ள தொடங்கினர். தனராஜ் மதுப்பழக்கம் உள்ளவர் என்பதால் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுமாறு தீபா தன்ராஜிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தன்ராஜ் தீபாவின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் தினமும் குடித்து வருவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

வழக்கம் போல நேற்றிரவு தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தன்ராஜ் தன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவியிடையே பெரும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது இருவரும் சரமாரியாக வார்த்தைகளால் தங்களை தாக்கி கொண்டனர்.

அப்போது மனைவியின் நடத்தையை சந்தேகிக்கும் வகையில் கணவன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்‌. பெரிதும் மனமுடைந்து தீபா இனிமேல் தன் தன்ராஜுடன் வாழ இயலாது என்று கருதி தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போதை சற்று தெளிந்தவுடன் தன்ராஜ் தீபாவை தேடி அவர் அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தூக்கில் தொங்கி இருப்பதை கண்டு மனம் அதிர்ந்தார் தன்ராஜ். உடனே தானும் மற்றொரு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்த ஓட்டேரி காவல் துறையினர் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இடையேயான தகராறில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஓட்டேரி பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.