முதலிரவு அறையில் காதலனுடன் மனைவி..! கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! கன்னியாகுமரி பரபரப்பு!

கன்னியாகுமரியில் முதலிரவு அறையில் புதிதாக திருமணமான இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த கணவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்து புலியூர்குறிச்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மாடசாமி என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மாடசாமிக்கு சுகன்யா (வயது 17) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் இருக்கும் கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சுகன்யா தன்னுடைய கல்லூரிக்கு தினம் தோறும் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அப்படியாக செல்லும்பொழுது கல்லூரிக்கு போகும் வழியில் சுதீஷ் என்பவர் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்த கடையில் அடிக்கடி பொருட்களை வாங்குவதற்காக சென்ற சுகன்யா , சித்தியுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை செல்போன் மூலம் தொடர்ந்துள்ளனர்.

தன் மகள் சுகன்யா, சுதீஷ் என்பவரை காதலித்து வருகிறார் என்ற தகவல் அறிந்த மாடசாமி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனடியாக காதும் காதும் வைத்த மாதிரி தனது மகளுக்கு தன்னுடைய சாதியில் வேறு ஒரு மாப்பிள்ளையைத் தேடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து புலியூர் குறிச்சி பகுதியில் வசித்துவந்த கோலப்பன் என்பவரின் மகன் விவேக்கை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பாக சுகன்யாவை, விவேக்கிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணமானது நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து அன்றைய நாள் முதலிரவு அறையில் செல்போனில் தன் காதலனுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த கணவர் விவேக்கிடம், தன்னுடைய காதலன் சுதீஷ் இடம் பேசிக் கொண்டு இருப்பதாகவும் தன்னை வலியுறுத்த வேண்டாம் எனவும் கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவேக் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சுகன்யாவை பார்ப்பதற்காக அவரது காதலர் சுதீஷ், விவேக்கின் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த விவேக்கின் பெற்றோர், உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர். முதலில் சுகன்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகன்யா தான் காதலித்த சுதிஷுடன் வாழ விரும்புவதாக கூறியிருக்கிறார். மேலும் பேசிய சுகன்யா, தனக்கு பதினேழு வயதுதான் ஆகிறது எனவும் நான் காதலிப்பதை விரும்பாத என் பெற்றோர் அவசர அவசரமாக என்னை கட்டாயப்படுத்தி விவேக்கிற்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும் ஏற்கனவே தானும் சுதீஷும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் போலீசாரிடம் கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தக்கலை போலீசார் மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்திற்கு சுகன்யாவை அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அந்த போலீஸ் அதிகாரிகள், 17 வயதே ஆகும் சுகன்யாவிற்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் ,கணவன், மாமனார், மாமியார், உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து உள்ளனர். மேலும் சுகன்யாவின் காதலர் சுதீஷை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து சுகன்யாவின் கணவர் விவேக் மற்றும் இந்த வழக்கில் இருந்து தப்பி விடவே காதலியை காப்பாற்ற வந்த காதலன் சுதீஷ் பரிதாபமாக இந்த வழக்கில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.