கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கொடுமைகளை தாங்க இயலாமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடு வீட்டில் சடலமாக தொங்கிய திருமணமான இளம்பெண்! அவர் கால்கள் மற்றும் தொடையில் எழுதப்பட்டிருந்த வார்த்தை! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கசாபாத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கல்லு பட்டேல் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ராமவல்லி. இவரின் வயது 30. இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணமான நாளிலிருந்து ராமவல்லியை அவருடைய கணவர், மைத்துனர் மற்றும் பிறர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். ராமவல்லி செய்யாத தவறுகளை அவர் மீது சுமத்தி அவருடைய குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மனதளவிலும், உடலளவிலும் ராமவல்லியை அவருடைய குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வதுதான் உகந்தது என்பதனை ராமவள்ளி உணர்ந்தார். அதன்படி தற்கொலைக்கு முந்தைய நாளில் தன்னுடைய காலில் அழிக்கமுடியாத கருப்பு மற்றும் நீல நிறத்தில் தான் அனுபவித்த கொடுமைகளை பற்றி எழுதியுள்ளார்.
மறுநாள் தான் நினைத்தவாறு ராமவல்லி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட பின்னர் அவருடைய உடலை பார்த்த கணவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை காட்டிக் னகொடுப்பது போன்று காலில் எழுதி இருந்ததை உணர்ந்த அவர்கள், உடனடியாக ராமவல்லியின் சடலத்தை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தோர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து மயானத்திற்கு சென்ற காவல்துறையினர், அவருடைய கால்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பட்டேலின் குடும்பத்தாரிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது மத்தியப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.