சென்னைக்குள் திடீரென படையெடுத்த வவ்வால்கள்..! ஆலமரத்தை ஆக்கிரமித்து கூச்சல்..! கோபாலபுரம் மக்களுக்கு கொரோனா பீதி!

சென்னை கோபாலபுரத்தில் வௌவால்கள் படையெடுத்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


சென்னை கோபாலபுரத்தில் கல்லறை தோட்டம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பழமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. கடந்த சில நாட்களாக வேறொரு இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான வௌவால்கள் இந்த ஆலமரத்தில் தஞ்சமடைந்துள்ளன. 

இந்த வௌவால்கள் இரவு நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பறந்து தஞ்சம் அடைகின்றன. அதுமட்டுமின்றி, இந்த வௌவால்கள் பரவி வருவதால் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில், அடுத்து வெட்டுககிளி படையெடுப்பு நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வௌவால் படையெடுப்பு செய்தியானது கோபாலபுரத்து மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.