மகன் வீடியோ எடுக்க! தாய் - தந்தை துடிக்க துடிக்க தீ வைத்துக் கொண்டு எரிந்த கொடூரம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் ரவுடிகளின் தொல்லைகளை தாங்க இயலாமல் தங்களை தீயிட்டு எரித்து தற்கொலைக்கு முயன்றனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சத்தியபால் சிங் எனும் ரவுடி இந்த தம்பதியினர் வீட்டிற்கு வந்து மிகுந்த தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இந்த தம்பதியினர் போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர் . போலீசார் இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர் . இதனைப் பார்த்து தாங்க முடியாமல் இந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர்கள் இந்த தம்பதியினர். இவர்களுக்கு ஒரு 14 வயதில் மகனும் உண்டு. தம்பதியினர் இருவரும் இணைந்து மதுரா காவல் நிலையத்திற்கு பின்புறத்தில் இருந்த இடத்தில் தீயிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு இருவரும் தீயிட்டு உள்ளனர் . அதனை அவர்களுடைய 14 வயது மகன் வீடியோவாக பதிவு செய்துள்ளான். மிகுந்த அழுகுரலோடு இங்குமங்குமாக உடம்பில் தீயிட்டு கொண்டு இருவரும் அலைந்து உள்ளனர் .  

அழுகுரல் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் இவர்களை காப்பாற்ற நினைத்துள்ளனர். இருப்பினும் அங்கு இருந்த போலீசார் இவர்கள் இருவருக்கும் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று அங்கிருந்த மக்களால் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இவர்களின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயற்சித்து இவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல் தம்பதியினர் புகார் அளித்தும் ரவுடி சத்யபால் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத இருந்த காரணத்தினால் சப்-இன்ஸ்பெக்டர் தீபக்கை சஸ்பெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவமானது உத்தரபிரதேச மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .