60 மணி நேரம் கடந்தும் கிணற்றுக்குள் சுர்ஜித்! காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மீட்பு படை! உண்மை காரணம் இது தான்!

தோண்டும் பாதையில் பாறைகள் இருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது.  இந்த கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, தற்போது 100 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 3-வது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் அத்தகைய முயற்சிகளில் எந்தவித பலனும் கிடைக்காததால், புது வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு குழிதோண்டி குழந்தையை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அந்த குழுவின் பாதையில் நிறைய பாறைகள் இருந்ததால் இயந்திரத்தின் பற்கள் உடைந்து போயின. இதனால் மீட்புப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. 

மிகவும் அதிகமான திறனை கொண்ட 2-வது எந்திரமானது ராமநாதபுரத்திலிருந்து எடுத்துவரப்பட்டது. 12 மணிக்கு தொடங்கிய பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாலை 4 மணியளவில் சுமார் 10 அடி ஆழம் வரை அந்த இயந்திரம் தோண்டியுள்ளது. குழிதோண்டும் பாதையில் பாறைகள் நிறைய அமைந்துள்ளதால் எளிதாக தோண்டப்பட இயலவில்லை என்று கூறப்படுகிறது.

60 மணி நேரம் கடந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் சிறுவனின் நிலை குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிறுவனை பத்திரமாக மீட்பதற்கு உரிய பணிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.