வெளியூரில் கணவன்! தனிமையில் மனைவி! குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூரம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தன் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை பகுதி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். இதன் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் ஷங்கர். இவர் பத்தாண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நித்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்றாலும், நாளடைவில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கத் தொடங்கின. எப்பொழுது பார்த்தாலும் வீன் கூச்சல்கள் மற்றும் கோபமான தோற்றத்தையே அந்த வீடானது பிரதிபலிக்க தொடங்கியது. இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அஸ்வினி என்ற 7 வயது மகளும், தனுஷ் என்ற 4 வயது மகனும் ஆவர். 

இந்நிலையில் வழக்கம் போல சென்ற வாரம் முழுவதும் தம்பதியினர் சண்டையிட்டுக் கொண்டனர். திடீரென்று வேலை நிமித்தமாக ஷங்கர் சென்னைக்கு வந்தார். நித்தியா தன் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். தனிமையின் காரணமாக நடந்தவற்றை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது நித்யா மனம் உடைந்தார்.

உடனே அவர் எதிர்பாராவிதமாக தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வீட்டிற்கு அருகில் இருந்தோர் தகவலறிந்து, ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சம்பவத்தினை பற்றி கூறினர்.

காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் ஆனது ராணிப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.