நடிகைகளை உல்லாசத்துக்கும், படுக்கைக்கும் நடிகர்கள் அழைப்பது உண்மைதான்..! வெளியான பகீர் அறிக்கை!

மலையாள திரையுலக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக டபிள்யூ.சி.சி அமைப்பினர் கருத்து கூறியுள்ளனர்.


2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி கற்பழித்த வழக்கில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இன்றுவரை இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்தபாடில்லை. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்காக மலையாள திரையுலகினர் டபிள்யூ.சி.சி என்ற அமைப்பை தொடங்கினர். 

இந்த அமைப்பின் மூலம் நடிகைகள் தங்களுக்கு இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரால் ஏற்படக்கூடிய பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள இயலும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இயக்கத்தில் பழம்பெரும் நடிகை ஹேமா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதி ஹேமா ஆகியோர் அடங்கிய கமிஷணை நியமித்தது. இந்த கமிஷனின் உறுப்பினர்கள் மலையாள திரையுலகிலுள்ள அனைத்து பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியத.

2 வருடங்கள் கழித்து தற்போது இந்த கமிஷன் தன்னுடைய அறிக்கையை முதல்வர் பினராய் விஜயனிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகைகள் திரையுலகில் முன்னணி இடத்திற்கு வரவேண்டுமென்றால் அவர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்க்கை நிலையை நினைத்து பயந்து வெளியில் கூறாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சில கட்டங்களில் நடிகைகளின் தனி உரிமைகளும் வெகுவாக மறுக்கப்பட்டு வருகின்றன. கழிவறை உடன் தனியறை, குடை மாற்றுவதற்கான வசதிகள் ஆகியவற்றை செய்து தர மறுக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் நடிகைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சினிமாவில் உச்சத்தை அடைய வேண்டும் என்பதற்காக நடிகைகள் விற்பனை பொருளாக தங்களை விற்று வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை முதல்வரிடம் கூறியுள்ளது.

இதனை நிறுத்துவதற்கான பல வழிமுறைகளையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளதாக கேரள முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிக்கையானது தற்போது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.