காசு கொடுக்காமல் தகராறு..! நாம் தமிழர் வேட்பாளர் தோலை உரித்த சுங்கச்சாவடி ஊழியர்கள்! திருச்சி திகுதிகு!

சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறு நாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவமானது கீரனூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சுங்கச்சாவடி வழியாக நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வினோத் சென்றுள்ளார்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது ஊழியர்களுக்கும் வினோத்திற்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் கைகலப்பு வரை சென்றது. ஊழியர்கள் ஒன்றுதிரண்டு வினோத்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அடித்துவிட்டு வினோத்தை சாலையோரத்தில் போட்டுள்ளனர்.

அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் வினோத்தை மீட்டு கீரனூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த வினோத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவமானது கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.