பாலத்தின் நடுவே ஓட்டை! உள்ளே இருந்து வெளியே வந்த இளைஞன்! நாகை அதிர்ச்சி!

பழுதடைந்த பாலத்தின் ஓட்டை வழியே இளைஞர் ஒருவர் சென்று மறுப்பக்கம் வெளியே வரும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைக்குளம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த தேவநதி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து வருகிறது.

சமீபத்தில் இந்த பகுதியில் பயங்கரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பாலத்தின் நடுவிலே ஆழ்துளை கிணறு போன்று பெரியதொரு ஓட்டை போடப்பட்டுள்ளது. இந்த கோட்டையானது பாலத்தின் வழியே செல்லும் மக்களை பெரிதும் அச்சப்பட வைக்கிறது.

இதனிடையே இளைஞரொருவர் இந்த ஓட்டையின் வழியே சென்று  மற்றொரு வழியாக வெளியே வரும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆபத்தை உணராத அந்த இளைஞர் செய்த இந்த செயலை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.