மேல்மருவத்தூர் கோவிலில் பயங்கர மோதல்..! அடித்து உதைக்கப்பட்ட செவ்வாடை பணியாளர்கள்! பழிக்குப் பழியாக அரங்கேறிய விபரீதம்!

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து இங்குள்ள அம்மனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மார்கழி மாதத்தில் கூட்டம் அலைமோதும் காரணத்தினால் பீட அமைப்பு செவ்வாடை பணியாளர்களை நியமிக்கும்.

இந்த சீசனில் கூட்டம் அலை மோதும் காரணத்தினால் அவ்வப்போது போக்குவரத்து மற்றும் வேறு சில பிரச்சினைகள் எழுவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கோவிலுக்கு வந்தார் இளைஞர்களை செவ்வாடை பாதுகாவலர்கள் தாக்கியுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தியநாதன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பிடதி வழியே, ஆட்டோ ஓட்டி சென்றுள்ளார்.

இந்தப்பக்கம் ஆட்டோவில் வரக்கூடாது என்று செவ்வாடை பணியாளர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து ஆட்டோவை பிடுங்கி கொண்டு வெளியே துரத்தினர். தன்னுடைய ஆட்டோ மீண்டும் கிடைக்காது என்ற வருத்தத்தில் சத்தியநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவருடைய உறவினர்கள் அவரை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோன்று தினேஷ் என்ற இளைஞர் பிடதியில் அன்னதானத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அந்த உணவினை அவரே எடுத்து செல்ல வேண்டும் என்று செவ்வாடை பணியாளர்கள் மிரட்டியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் மற்றும் அவருடன் வந்திருந்த கணபதியை பாதுகாவலர்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போதிலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் தினேஷின் ஆதரவாளர்கள் சோத்துப்பாக்கம் பகுதிக்கு சென்றிருந்த செவ்வாடை பணியாளர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். காயமடைந்த அனைவரும் மேல்மருவத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு செவ்வாடை பணியாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்‌. 

ஆனால் இதற்கும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவமானது மேல்மருவத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.