திடீரென கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி! அசுர வேகத்தில் பஸ் மீது மோதிய கோரம்! பற்றி எரிந்த தீயில் 3 பேர் கருகினர்!

விரைவு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சங்ககிரி பல்லக்காபாளையம் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அரசுப்பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.

பேருந்தும் லாரியும் எதிர் எதிரே அதிவேகத்தில் மோதி கொண்டன. இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்ககிரியில் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.