திராவிடர் கழகம் உடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும்! இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்! ஹெச். ராஜா அதிரடி!

திராவிடர் கழகம் உடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஹெச். ராஜா அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


இந்திய நாட்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாஜக கட்சியின் சார்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊர்வலம் நடைபெற்றது . இந்த ஊர்வலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த ஹெச். ராஜா பங்கேற்றிருந்தார். இதில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிரடியாக கருத்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாகரிகமானவர்கள் என்றும் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் கூறியுள்ளார். திராவிடர் கழகத்தினருக்கு இந்து எழுச்சி பார்த்து பயம் வந்துவிட்டதாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் திராவிட கழகத்தினருடன் திமுக வைத்திருக்கும் உறவை முறிக்க வில்லை என்றால் மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சிலால் அதிரடியாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவரவர் செய்த ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர்வினை இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவரிடம் செய்தியாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி பற்றியும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூட்டணி பற்றி என்னால் எதுவும் கருத்து கூற இயலாது அது பாஜகவின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறி விட்டார்.