மீண்டும் ஸ்டாலினை கிண்டல் செய்யும் போஸ்டர்கள். இதையே சமாளிக்கத் தெரியாதவர், தேர்தலை எப்படி சமாளிப்பார்?

‘செயல் தலைவனா..? அறிக்கை நாயகனா..?, மண்ணின் மைந்தனா, உளறல் நாயகனா.., தன்னம்பிக்கை தலைவனா..? துண்டுச்சீட்டு தலைவனா..? மக்களில் ஒருவரா.. மடாதிபதியா.. மக்களுக்கான போராளியா.. குடும்ப போராளியா..?’ என்பன போன்ற போஸ்டர்கள் முன்பு கோவையில் ஒட்டப்பட்டன. இதற்கு ஸ்டாலினும் அவரது கட்சியினரும் கடுமையாகப் போராட்டம் நடத்தினார்கள்.


அதேபோன்று, இப்போது மீண்டும் சென்னை , கோவை, மதுரை , திருச்சி , சேலம் உள்ளிட்ட நகரங்களில் திமுக தலைவர் மு. க ஸ்டாலினை கிண்டல் செய்யும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

லேட்டஸ்ட்டாக ஊரடங்கில் அயராது உழைத்தவர் தேவையா.. அழகாக ‘விக்’ மாட்டியவர் தேவையா.. என்ற போஸ்டர் திமுகவினரை அதிர வைத்திருக்கிறது. ஏற்கனவே, இம்சை அரசன் ‘இரண்டாம் புலிகேசி ரேஞ்சுக்கு’ கொண்டு சென்றவர்கள் இனியும் என்ன செய்யப் போகிறார்களோ என திமுகவினர் வெளிப்படையாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த போஸ்டர் விவகாரத்தையே சமாளிக்கமுடியாத ஸ்டாலின், எப்படித்தான் தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்கொள்ளப் போகிறாரோ..?