உதயநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டது எப்படி..? வெளியே வந்த சீக்ரெட் தகவல்கள்

உதயநிதிக்கு சீட் கொடுத்தால் மக்களிடம் வெறுப்பு வந்துவிடும், கட்சிக்காரர்களிடம் கடுப்பு வந்துவிடும். அதனால், அவருக்கு சீட் கொடுக்கவே வேண்டாம் என்றுதான் ஐபேக் நிறுவனம் ஸ்டாலினிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டது.


அப்படி சீட் கொடுத்தால் தி.மு.க.வின் இமேஜ் ரொம்பவே அடிபடும் என்பதால், தோல்வி அடைந்தாலும் எங்கள் மீது குற்றம் சாட்டக்கூடாது என்பதுதான் ஐபேக் ரிப்போர்ட். ஆனால், அதை மீறி உதயநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னாச்சு என்று விசாரித்தால், எல்லாம் துர்கா ஸ்டாலினின் வற்புறுத்தல்தான் காரணம் என்கிறார்கள். ஸ்டாலின் வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல் அடம் பிடித்து உதயநிதியின் பெயரை சேர்க்க வைத்தாராம்.

மனைவியின் பேச்சைத் தட்ட முடியாமல் உதயநிதியின் பெயரை சேர்த்து பட்டியல் வெளியிட்டுவிட்டார் ஸ்டாலின். அதுசரி, கட்சி இருப்பதே குடும்பத்துக்காகத்தானே, இதை மறந்தால் என்னாவது..?