பச்சிளங் குழந்தையிடம் எப்படிப் பேசுவது ??

ஒருசில குழந்தைகள் விரைவாகவும் சில குழந்தைகள் மிகவும் தாமதமாகவும் பேசத் தொடங்குவதுண்டு. நிதானமாக பேசினால் போதும், என்ன அவசரம் என்று பேச்சு தாமதம் ஆவதை பலர் கண்டுகொள்வதே இல்லை. விரைவில் குழந்தை பேசவேண்டும் என்றால், குழந்தை பிறந்ததில் இருந்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.


·         குழந்தைக்கு எதுவும் புரியாது, பேசுவதைக் கேட்காது என்ற எண்ணத்தை தாய் மாற்றிக்கொள்ள வேண்டும்.

·         பச்சிளங் குழந்தைகளால் தாய் பேசுவதைக் கேட்கவும் கிரகித்துக்கொள்ளவும் முடியும் என்பதுதான் உண்மை.

·         அதனால் கூடியவரை அவ்வப்போது குழந்தையுடன் சந்தோஷமாக உரையாடவேண்டியது அவசியம்.

·         பால் குடிக்கலாமா, பாப்பாவுக்கு வயிறு நிறைஞ்சாச்சா, அம்மா கையை பிடிச்சுக்கோங்க என்று அவ்வப்போது பேசிக்கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

தாய் பேசுவது மட்டுமின்றி குழந்தையையும் பேசுவதற்குத் தூண்ட வேண்டும். ம் சொல்லு.. ம்மா சொல்லு என்று பேசிக்கொண்டே இருந்தால், அந்தத் தூண்டுதல் மூலம் குழந்தை விரைவாக பேசத் தொடங்கும். வேறு ஏதேனும் குறை இருந்தாலும் விரைவில் கண்டறியமுடியும்.