செல்வம் தரும் மணி பிளாண்ட் செடி! வீட்டில் எங்கு எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா?

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.


இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம்.

இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்..

வாஸ்து சாஸ்திரப்படி அவை உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். இது செல்வ செழிப்பை உண்டாக்கி, எதிர்மறை சக்தியை விலக்கி வைக்கவும் உதவுகிறது. உலர்ந்த மற்றும் வாடிய மணி ப்ளாண்ட் துரதிர்ஷ்டத்தை தரும். எனவே அதன் இலைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உலரவோ அல்லது வாடிவிடவோ கூடாது. அதன் இலைகள் தரையைத் தொடாமல் இருக்க வேண்டும். அதன் தண்டுகள் மற்றும் இலைகள் வாடிவிட்டால் அல்லது வறண்டுவிட்டால் அவற்றை கத்தரிக்கவும்.

கிழக்கு-மேற்கு திசையில் ஒருபோதும் வைக்க கூடாது. உங்கள் மணி பிளான்ட் கிழக்கு-மேற்கு திசையில் வைத்திருப்பது வீட்டிற்கு பிரச்சினைகளை அளிக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் வாதங்களுக்கும், குழப்பமான தருணங்களுக்கும் வழிவகுக்கும். எனவே இந்த திசையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மணி பிளான்ட் பொறுத்தவரை வீட்டிற்க்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்க்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும். ஒரு தொட்டியில் அல்லது கண்ணாடி குவளையில் வளர்க்கலாம். வீட்டின் நுழைவுவாயில் வடக்குப் பகுதியில் வைக்கலாம். நுழைவுவாயிலின் வடக்கில் வைத்தால் புதிய தொழில் ஆதாரங்களையும், வாய்ப்புகளையும் அள்ளி கொடுக்கும். நல்ல அதிர்ஷ்த்தை தரும்.

பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிற பாட்டிலில் வைக்கலாம். மணி பிளான்டை பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிறம் கொண்ட பாட்டிலில் வைத்தால் அதிக செல்வத்தை வாரி வழங்கும். அதன் பின்னணியில் அழகிய ஓவியத்தை பயன்படுத்தலாம் அது நேர்மறை எண்ணங்களை மேலோங்க செய்யும்.

வீட்டில் மூலையில் வைக்கும் போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு சென்று வர இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான இட வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பசுமையான இலைகள். உங்கள் மணி பிளான்ட் பசுமையான இலைகள் தான் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பசுமையான இலைகள் தான் செல்வ வளத்தை பெருக செய்யும். வறண்ட இலைகளை மற்றவர்கள் வெட்ட விடாதீர்கள். இலைகள் வறண்டு போகும் போது அதனை நீங்கள் தான் வெட்டிவிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள், அயலர்கள் வெட்டினால் கூட நீங்களே உங்கள் செல்வத்தை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அர்த்தமாகிறது. எனவே உங்கள் கையால் நீங்களே வறண்டு போன இலைகளை கத்தரித்து விடவும்.

எந்த வகையான மண் சரியானது என்று தோட்டக்காரர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். காற்றோட்டமான மண் மணி பிளான்டிற்கு உகந்தது என்று கூறப்படுகிறது. மணி ப்ளான்ட் பொறுத்த வரையில் வீட்டில் இருக்கும் சாதாரண உரத்தையே பயன்படுத்தலாம். சுத்தமான நீராக இல்லாவிடில் இலைகள் சற்றே மஞ்சள் நிறமாக மாறக்கூடும். பாதி வெயிலில் வைத்தால் போதுமானது.