ஞான ஒளி வழங்கும் தீப துர்க்கைக்கு பூஜை வழிபாடு! நவராத்திரி 9ம் நாள் வழிபாடு மகிமை!

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.


சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

நவராத்திரி திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மகிசாசூரண் வதம் செய்யும் நிகழ்வு உள்ளது. அப்படி சூரணை வதம் செய்ய செல்லும் அம்பிகை தனது ஆயுதங்களுக்கு பூஜை செய்து கொண்டு செல்வதாக கருதப்படுகின்றது. அப்படி அம்பிகை தோன்றிய அவதாரத்தின் நோக்கத்தை நிறைவேற்ற செய்த பூஜையாக ஆயூத பூஜை அதாவது சரஸ்வதி பூஜை பார்க்கப்படுகின்றது.

அம்மன் வடிவம் : சாமுண்டி பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல்.அம்மன் வடிவம் : தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள். முண்டமாலையும் அணிந்தவள்.முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். மிகவும் சினம் கொண்டவள். தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள்.

தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் தீப துர்க்கை. யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாமரை அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : மரிக்கொழுந்து அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : வெள்ளை நிறம் அன்னையின் அலங்காரம் : சுபத்ராதேவி அலங்காரம் அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வெண் மலர்கள்.

கோலம் : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும்.நெய்வேத்தியம் : அக்கார வடிசல் குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 10 வயது குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சௌபாக்கியம் உண்டாகும். பாட வேண்டிய ராகம் : வசந்தா நடனம் : கோலாட்டம் குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : திரட்டுப்பால் பலன்கள் : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள்.

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது.

நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.