உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

தினமும் குளிக்கும் முன்பு பால் ஏடு எடுத்து நன்றாக முகம் முழுவதும் தடவி 10 நிமிடம் வைத்திருந்து,பின்னர் நன்கு கழுவி விடவும். உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் அகன்று பளீச்சென நார்மலாகிவிடும்.


அதேபோன்று செலவே இல்லாமல் உங்கள் முகமும் பளிச் ஆவதற்கு எளிதான இன்னொரு வழி இருக்கிறது. அது, கல் உப்பு, ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து முகம் மற்றும் உடம்பில் ஸ்கிரப் செய்ய வேண்டும். அதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடல் சருமமும், முகமும் பளீச் ஆகும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு உடல் ஹீட்டாகி அடிக்கடி பருக்கள் தோன்றுவது சகஜம். அப்படி வந்தால் ஜாதிக்காயினை உரசி 4 நாட்கள் தொடர்ந்து போட்டால் உடனே மறைந்துவிடும். அதே போன்று ஜாதிக்காய் மூலமே கரும்புள்ளிகளையும் விரட்டிவிடலாம்.

தினமும் காலை, மாலை நேரத்தில் தக்காளியை நன்றாக மசித்து பேஸ்ட் செய்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவிவிடவும். இதுவும் அழகுக்கு கியாரண்டி தரும் சிகிச்சை ஆகும். அதேபோன்று உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி முகம் புதுப் பொலிவாக இருக்கும்