பர்ஸில் எப்போதும் பணம் நிறைய வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை கடைப்பிடியுங்க போதும்!

கடனாளி ஆகாமலிருக்க முதலில் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால், நம்முடைய பர்ஸை எப்போதும் பணம் நிரம்பி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


அதற்கு நம்முடைய பர்ஸை நாம் முறையாக பராமரித்து வந்தாலே போதும். மகாலட்சுமி சுலபமாக அதில் வந்து குடியேறி விடுவாள். வெகு சிலர் மட்டுமே பர்ஸை முறையாக பயன்படுத்துபவர்களாக உள்ளனர். சிலர் பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியும்.

அந்த ரூபாய் நோட்டுக்களை அவர்கள் எடுக்கும் லாவகமே அலாதியானதாக இருக்கும். சிலருக்கு பர்ஸில் பணம் அவ்வப்போது வந்தாலும், வந்த சுவடு தெரியாமல் உடனடியாக கரைந்து விடும். அதற்கு முக்கிய காரணம் பணத்தை முறையாக பர்ஸில் வைக்காமல், ஏதோ ஒரு அழுக்கு பையில் அழுக்கு துணிகளை திணிப்பது போல் திணித்து வைப்பார்கள். பணத்திற்கு மதிப்பளிக்காமல் ரூபாய் நோட்டுக்களை கசக்கி திணித்து வைப்பார்கள்.

பணம் என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இருப்பிடமாகும். நம் வீட்டில் பூஜை அறையை எப்படி சுத்தமாக வைத்திருப்போமோ, அதே போல் தான் நாம் வைத்திருக்கும் பர்ஸையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இல்லாமல் ரூபாய் நோட்டுக்களை சுருட்டியோ அல்லது இஷ்டத்திற்கு மடித்தோ வைத்தால், மஹாலட்சுமி எப்படி வருவாள். அந்த பர்ஸை பார்த்தாலே காத தூரத்திற்கு ஓட்டம் எடுப்பாள். அதற்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் தான் மஹாலட்சுமியும் நம்முடைய பர்ஸில் நிரந்தரமாக குடியேறுவாள்

நாம் வைத்திருக்கும் பர்ஸில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்றால், அதை முறையாக பராமரிப்பது அவசியமாகும். மேலும் நாம் வைத்திருக்கும் பர்ஸும் அழகாகவும், பணத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கவேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் வாங்கும் பர்ஸானது அழகிய பச்சை வண்ணம், பர்ப்பிள், நேவி ப்ளூ, பிங்க் போன்ற நிறங்களில் இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் பர்ஸில் பணம் எளிதில் சேரும். மேலும் நாம் வாங்கும் பர்ஸும் ரூபாய் நோட்டுக்கள் கசங்காமல் எளில் நுழையும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்

உங்களுடைய பர்சில் எப்போதும் (octagon) எண்கோணம் வடிவில் இருக்கும் கண்ணாடி வைத்துக்கொள்வது சிறப்பான ஒரு விஷயம். ஏன் என்றால் இந்த எண்கோண கண்ணாடியானது உங்கள் பர்ஸில் என்ன இருக்கின்றதோ அதை பன்மடங்காக பெருக்க கூடியது ஒன்று. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

பஸ்ஸில் கட்டாயம் ரூபாய் நோட்டுகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் காலியான பர்ஸ், காலியாக தான் இருக்கும். ஏனென்றால் இந்த எண்கோண கண்ணாடியின் செயல்பாடு அப்படி. உங்களது பர்ஸில் எப்போதும் ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் கண்டிப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நோட்டையும், நாணயத்தையும் செலவு செய்ய வேண்டாம்.

அடுத்ததாக ஐந்து ஏலக்காய்களை ஒரு பச்சை பட்டு துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி பர்ஸில் வைக்கும் அளவிற்கு வைத்துக்கொள்ளலாம். பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, பச்சைக் கற்பூரம் போட்டு கட்டி அதை பர்ஸில் வைத்துக் கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.

கூடவே நம்மை கடன் வாங்குதில் இருந்து தப்பிக்க வைக்கும். கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயம். ஒருவேளை நாம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் அந்த கடனை அடைக்கும் வகையில் நம்முடைய பர்ஸில் பணம் சேர்ந்துவிடும்

இவை எல்லாவற்றையும் பின்பற்றினால் கூட, உங்களிடம் இருக்கும் பர்ஸை உங்கள் கைக்காசை போட்டு வாங்காமல், உங்களின் மனதுக்கு பிடித்தவர் கைகளால் அதாவது, மனைவியாக இருக்கலாம், உங்கள் குழந்தையின் சேமிப்பில் வாங்கிய பரிசாக இருக்கலாம், உங்களது தாய் தந்தை வாங்கி கொடுத்ததாக இருக்கலாம். இப்படி சென்டிமென்டாக இருக்கும் பர்ஸை உபயோகப்படுத்துவது நல்ல வருமானத்தை கொடுக்கும்.

நீங்களும் உங்க மனதிற்கு பிடித்தவர்களுக்கு மணிபர்ஸ் வாங்கி அன்பளிப்பாக கொடுங்க நிறைய பணம் சேரும்.