புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து உலக நாடுகளுக்கு எல்லாம் பரவி இந்தியாவுக்குள்ளும் அடியெடுத்து வைத்தது. இளம் வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. முற்றிய வெண்டையை காயவைத்து வற்றல் போட்டு பயன்படுத்தலாம்.


வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.

       ·   வெண்டையில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

       ·   வெண்டைக்காயில் பிசுபிசுவென்று வெளிப்படும் திரவத்தின் தன்மை காரணமாக மூளைக்கு புத்துணர்ச்சியும், நரம்புக்கு சுறுசுறுப்பும் கிடைக்கிறது.

       ·  வெண்டையில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றுகிறது.

       ·  வெண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு நல்ல புத்திக்கூர்மையும், ஞாபகசக்தியும் கிடைக்கிறதுவெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து உடலின் திரவ இழப்பை தடுத்து, உடல் குளுமை அடைவதற்கு உதவுகிறது