திருமணவிழாவில் பாட்டுக்கச்சேரி நடக்கவில்லை என்பதற்காக நடந்த சண்டையின் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பட்டுப் புடவையுடன் பாய்ந்த மணமகன் வீட்டு பெண்கள்! திருமண வீட்டை கலவர பூமியாக்கிய விபரீதம்! அதிர்ச்சி காரணம்!
தெலங்கானா மாநிலத்தில் சூர்யாபேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிகுட்பட்ட தொகரா கிராமத்தில் நேற்று மாப்பிள்ளை அழைப்பு விழா அரங்கேற்றப்பட்டது. இந்த விழாவில் மாப்பிள்ளை அழைப்பின் அனைத்து சம்பிரதாயங்களையும் பெண் வீட்டார் பார்த்துக்கொண்டனர்.
இந்நிலையில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண்வீட்டார் பாட்டுக்கச்சேரியை ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் கடும் கோபம் அடைந்துள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு பெண் வீட்டாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சண்டை போட்டுக்கொள்ள தொடங்கியுள்ளனர். கைகளில் கிடைத்த நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் முதலியவற்றால் ஒருவரையொருவர் அடித்து ரகளை செய்துள்ளனர். சம்பவத்தில் சண்டையிட்ட அனைவருக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சண்டையில் காயமடைந்த நிறையபேர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது தொகரா கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.