காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு, அந்த பெயர் வந்த ரகசியம் தெரியுமா?

காஞ்சிபுரத்தில் ஒரு முறை பிரம்மதேவர் தனது செயல்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் யாகம் நடத்தினார்.


அந்த யாகத்திற்கு அவர் தனது மனைவி சரஸ்வதியை அழைக்கவில்லை. இதனால் பிரம்மா மீது சரஸ்வதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. இதனால் காயத்ரி மட்டும் சாவித்திரியின் துணைகொண்டு பிரம்மா யாகத்தைத் தொடங்கினார்.

இதை அறிந்த சரஸ்வதி வேகவதி ஆறாக மாறி யாகத்தை அழிக்கக் கரைபுரண்டு வந்தாள். இதை கண்டு பெருமாள் அந்த நதியின் குறுக்கே சயன கோலமாக தன்னை வெளிப்படுத்தினார். இதை கண்டதும் நதியாக இருந்த சரஸ்வதி தனது பாதையை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டாள்.

இதை அறிந்த பிரம்மா மிகவும் நெகிழ்ந்து போனார். தனக்காக ஆற்றின் குறுக்கே சயனித்த பெருமாளை வணங்கினார். அப்போது தேவர்களும் ரிஷிகளும் பெருமாளை வணங்கி தங்களது விருப்பங்களும் நிறைவேற வரம் கேட்டனர். அவர்கள் கேட்டதையெல்லாம் பெருமாள் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கினார். இதனால் அந்தப் பெருமாளுக்கு கேட்ட வரம் தருபவர் என்ற பெயரில் ’வரதர்’ என்ற பெயர் உருவானது.