பிறந்த குழந்தையின் தலை அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ??

பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் மல்லாந்து படுத்துத்தான் தூங்குவார்கள். எப்போதும் இந்த நிலையில் மட்டுமே தூங்கினால், குழந்தையின் தலை அமைப்பு சரியான வடிவத்திற்கு வராமல் போகலாம். அதனால் தலையின் வடிவம் சரியாக வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.


·         குழந்தை தூங்கும்போது கொஞ்சநேரம் இடதுபுறம், வலதுபுறம் என்று தலையை மாற்றி வைத்திருக்க உதவவேண்டும்.

·         விழித்திருக்கும் குழந்தையை தினமும் சிறிது நேரமாவது குப்புறப்படுக்க வைப்பது நல்லது. ஆனால் குழந்தையின் தலை கீழே முட்டிவிடாமல் இருக்கும்படி எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

·         குப்புறப் படுக்கவைக்கும் போதுதான், தலையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு குழந்தை முயற்சி செய்யும்.

·         தலை மட்டுமின்றி முதுகு, கழுத்து, தோள்பட்டை, கைகள் போதிய பலம் பெறவும், வடிவம் பெறவும் குப்புறப்படுத்தல் உதவுகிறது.

கண்காணிக்க முடியாத நேரங்களில் குழந்தையை குப்புறப்படுக்க வைப்பது ஆபத்தாக முடியலாம். பொதுவாக தாய் தன்னுடைய உடல் மீது குழந்தையை குப்புறப் படுக்கவைத்துக் கொள்வது இன்னமும் சிறப்பான வழிமுறையாகும்.