கர்ப்பிணியின் உடல் எடை எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும்?

எடை அதிகரிப்பது உடல் நலனுக்கு ஆபத்து என்று பொதுவாக மருத்துவத்தில் எச்சரிக்கை செய்யப்படுவதுண்டு. இதற்கு விதிவிலக்காக கர்ப்ப காலத்தில் மட்டும் பெண்கள் உடல் எடையை அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதேநேரம் அளவுக்கு மீறி உடல் எடையை அதிகரிப்பது சிக்கல் தரலாம்.


• கர்ப்ப காலத்தில் எந்த அளவுக்கு எடை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களது இப்போதைய உடல் எடையை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.

• ஒவ்வொரு கர்ப்பிணியும் பாடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் உடல் எடை குறியீட்டு எண்ணை அறிந்துகொண்டு, ;அதற்கு ஏற்ப எடையை அதிகரிக்க வேண்டும்.

• பி.எம்.ஐ. அளவு 19க்கு குறைவாக இருப்பவர்கள் சரியான உடல் எடையுடன் இருப்பதால், இவர்கள் 12 கிலோ முதல் 18 கிலோ வரை அதிகரிக்கலாம்.

• ஓரளவு ரிஸ்க் என கருதப்படும் பி.எம்.ஐ. அளவு  19க்கு மேல் 25 வரை உள்ளவர்கள் 11 கிலோவில் இருந்து 16 கிலோ வரை எடை கூடலாம்.

பி.எம்.ஐ. அளவு 25க்கு மேல் இருப்பது அபாயகரமான எடையாக கருதப்படுகிறது. இவர்கள் 6 முதல் 9 கிலோ வரை மட்டுமே கர்ப்ப காலத்தில் எடை அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக எடை குறைவதும், கூடுவதும் ஆபத்தான நிலை ஆகும். இதுகுறித்து இனி விரிவாக பார்க்கலாம்.