நாம் எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

சமையலறையில் மிகவும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது உப்புதான். ஏனென்றால் காலை முதல் இரவு வரை செய்யப்படும் அத்தனை வகையான உணவுகளிலும் உப்பு இடம் பெறுகிறது.


ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு போதுமானது என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக்கொள்கிறார்கள்.

·         உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சவும் கழிவுகளை வெளியேற்றவும் உதவும் திசுக்களின் இயக்கத்திற்கு பொட்டாசியம் மற்றும் சோடியம் உப்புக்கள் அவசியம் தேவை.

·         உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் தவிர சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம்.

·         உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழப்பதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

·         உடல் பருமன் உள்ளவர்களும், ஹார்மோன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் சாப்பிடும் தானியங்கள் மற்றும் காய்களில் சோடியமும் பொட்டாசியமும் இருப்பதால், தனியே உப்பு சேர்த்துக்கொள்வதை குறைத்துக்கொள்வது நல்லது.