மூஞ்சூரு விநாயகரின் வாகனமான வரலாறு!

உருவத்தில் மிகவும் பெரிய அளவில் இருக்கும் விநாயகர் எப்படி மிகவும் சிறிய உருவத்தில் இருக்கும் மூஞ்சூரு மீது பயணம் செய்கிறார் என்பதைப் பற்றி தெரியுமா ?


இந்துக்கள் வணங்கும் ஒவ்வொரு கடவுளும் சிங்கம் , மயில் , புலி என பலவிதமான வாகனங்களை கொண்டிருக்கையில் உருவத்தில் மிகவும் பெரிய அளவில் இருக்கும் விநாயகர் மிகவும் சிறிய அளவிலான மூஞ்சூருவை தன்னுடைய வாகனமாக கொண்டிருப்பது நம்மை திகைக்க வைக்கும் ஆச்சரியம் என்றே கூறலாம்.

மூஞ்சூரு எப்படி விநாயகரின் வாகனமானது என்பதைக் காண்போம் !

கஜமுகன் என்னும் ஒரு அரக்கன் சிவபெருமானிடம் தீவிரமாக தவம் புரிந்து தன்னை எந்த ஒரு ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாத ஒரு வரத்தை பெற்றான். இந்த வரத்தைப் பெற்ற ஆணவத்தில் திரிந்த கஜமுகன் இந்திரலோகத்தில் இருந்த எல்லா தேவர்களுக்கும் இடர் விளைவித்தான். இதன் விளைவாக எல்லா தேவர்களும் கஜமுகனே வரம் அளித்த சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். கஜமுகன் னுக்கு அவர் அளித்த வரத்தை திரும்ப பெறுமாறு அவரை வற்புறுத்தினர். 

இதனையடுத்து கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான் விநாயகரை அழைத்து அவரை கஜமுகனை அழிக்குமாறு கட்டளையிட்டார். விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். விநாயகருக்கும் கஜமுகனுக்கும் இடையே போர் மூண்டது. முதலில் விநாயகர் கஜமுகனை தன்னுடைய பானங்களால் தாக்கினார். இருப்பினும் கஜமுக எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. இதனை அடுத்து விநாயகர் தன் கைகளில் இருந்த உள்ள கையைப் பயன்படுத்தி கஜமுகனை அடித்தார் மயங்கி விழுந்த கஜமுகன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் கஜமுகன் சிவபெருமானிடம் பெற்ற சாகா வரம் விநாயகருக்கு நினைவிற்கு வந்தது.

அதனால் விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை உடைத்து கஜமுகனை தாக்கினார். உடனே அசுரன் பெருச்சாளி உருவம் எடுத்து விநாயகரிடம் போரிட்டான். இறுதியில் விநாயகர் அந்த பெருச்சாளியையும் என்று தன்னுடைய வாகனமாக மாற்றிக் கொண்டார்.